புதுக்கோட்டை மாவட்டத்தில்தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தேர்வு5,277 மாணவர்கள் எழுதினர்




புதுக்கோட்டை மாவட்டத்தில் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வு இலுப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கீரனூர் அரசுமகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நடைபெற்றது. இத்தேர்வினை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்திய மூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் அவர் கூறியதாவது:-

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வானது அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்படுகிறது. இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை மாதந்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும். அந்த முறையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 25 மையங்களில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்ட தேர்வினை எழுத 5,317 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். 
5,277 பேர் எழுதினர் 
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேர்வினை 5,277 மாணவ-மாணவிகள் எழுதியுள்ளார்கள். அனைத்து மையங்களிலும் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு தேர்வானது நடைபெற்றது. இத்தேர்வு பணியில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தேர்வு மையங்களை அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்கள் பார்வையிட்டனர் என்றார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments