ஆன்லைன் App-ல் முதலீடு - ஏமாற்றப்பட்ட இளைஞரின் பணத்தை மீட்ட இராமநாதபுரம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்.
 இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த காமேஷ்முருகன் என்ற இளைஞர் GOOGLE பக்கத்தில் "ININFUND  என்ற App-ல் முதலீடு செய்து வாரந்தோறும் 5% வருமானம் பெறுங்கள்" என்று வந்த விளம்பரத்தை நம்பி தனது மொபைலில் ININFUND என்ற App Download செய்து தனது வங்கி கணக்கிலிருந்து ரூ.200000/- பணத்தை முதலீடு செய்துள்ளார். இரண்டு மாதம் கடந்தும் தனக்கு லாபமாக வந்த பணத்தை  எடுக்க முடியாமல் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளித்தார்.

 காமேஷ் முருகனின் புகாரை பெற்று மனு ரசீது பதிவு செய்த இராமநாதபுரம் சைபர் கிரைம் காவல்துறையினர் துரிதமாக விசாரணை செய்து, மனுதாரர் பணம் செலுத்திய வங்கி கணக்கை முடக்கி வைக்குமாறு  (YES BANK) வங்கி கிளைக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பினர். இந்நிலையில் Fictee Technology Pvt Limited என்ற நிறுவனத்தின் Payment Service Provider (JAMBOPAY) சைபர் கிரைம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு காமேஷ் முருகன் அனுப்பிய பணம் Fictee Technology Pvt Limited நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருப்பதாக தெரிவித்தனர்.

 இதனை தொடர்ந்து 08.03.2022-ம் தேதி காமேஷ் முருகனின் வங்கி கணக்கில் ரூ.200000/- பணம் செலுத்தப்பட்டதற்கான சான்றிதழை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.A.அருண் அவர்கள் (CCW) காமேஷ் முருகனிடம் வழங்கினார்கள்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments