புதுக்கோட்டை மாவட்டத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். மாவட்ட ஆட்சியர்





புதுக்கோட்டை மாவட்டத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப, அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப, அவர்கள் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை இன்று (08.03.2022) வழங்கினார்.

மேலும், இன்றைய சூழலில் பெண்கள் அனைத்து துறைகளிலும் கால்பதித்து வருகின்றனர். இந்த வருடத்தில் நம்முடைய இலக்கு என்பது ஆண், பெண் சமத்துவம் மற்றும் சமூகத்தில் நிலையான வளர்ச்சி (Sustainable Growth & Development) என்பதை உணர்ந்து தங்களது பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள், கிராம பஞ்சாயத்து மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மூலமாக சமத்துவம் மற்றும் நீடித்த நிலையான வளர்;ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதற்கு இன்று முதல் உறுதியெடுத்து நடைமுறைபடுத்துவோம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்தார்.


மேலும், மகளிர் தின விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, பாட்டு போட்டி, கோலப் போட்டி, ஓவியப் போட்டி, நாடகப் போட்டி மற்றும் உணவு தயாரித்தல் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், மகளிர் சுய உதவிக்குழுவினரின் சிறுதானியம் விற்பனை நிலையத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், சர்வதேச மகளிர் தின விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப, அவர்கள் அரசு அலுவலர்களுடன் கொண்டாடினார்கள்.
இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) தமிழ்செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.தங்கவேல், வருவாய் கோட்டாட்சியர் (பொ) கருணாகரன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் திரிபுரசுந்தரி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மு.தனலெட்சுமி, உதவித்திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments