10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்களுக்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கியது 16-ந் தேதி கடைசி நாள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021-2022-ம் கல்வி ஆண்டில் நடைபெற இருக்கின்ற 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க நேற்று முதல் தொடங்கியது. புதுக்கோட்டை கல்வி மாவட்டத்திற்கு புதுக்கோட்டை தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகளிலும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்திற்கு அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மணமேல்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களிலும், இலுப்பூர் கல்வி மாவட்டத்திற்கு கீரனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் விண்ணப்பிக்கலாம்.

வருகிற 16-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்க இயலாத தனித்தேர்வர்கள் தக்கல் முறையில் வருகிற 18-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்

10-ம் வகுப்பிற்கான விண்ணப்பக்கட்டணம் தாள் ஒன்று ரூ.175 ஆகும். தக்கல் முறையிலான விண்ணப்பக்கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.675 ஆகும். நேரடியாக 11-ம் வகுப்பு எழுதும் தனித்தேர்வர்களுக்கான விண்ணப்பக்கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.235-ம், தக்கல் முறையில் எழுதுபவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.1,235 ஆகும்.

11-ம் வகுப்பில் நிலுவை தாள் (அரியர்) ஒன்றுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.135-ம், தக்கல் கட்டணம் ரூ.1,135 ஆகும். 12-ம் வகுப்பு நிலுவைத்தாள் (அரியர்) ஒன்றுக்கான கட்டணம் ரூ.135-ம், தக்கல் கட்டணம் ரூ.1,135-ம் ஆகும். 12-ம் வகுப்பு முதல் முறையாக தேர்வு எழுதுபவர்களுக்கு தாள் ஒன்றுக்கான கட்டணம் ரூ.235-ம், தக்கல் முறையிலான விண்ணப்ப கட்டணம் தாள் ஒன்றுக்கு ரூ.1,235 ஆகும். தனித்தேர்வர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments