புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் திங்கட் கிழமை 14.03.2022 அன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் மீண்டும், மக்களின் நலனை கருத்தில் கொண்டு 14.03.2022 அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

 அதுசமயம், பொதுமக்கள் சமூக இடைவெளியினை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தவறாது தங்கள் ஆதார் அட்டை மற்றும் கைப்பேசி எண்ணுடன் வந்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments