கோபாபாலப்பட்டிணம் பொதுநல அமைப்புகள், சமூக ஆர்வலர்களுக்கு GPM மீடியாவின் கோரிக்கை...
கோபாபாலப்பட்டிணம் பொதுநல அமைப்புகள், சமூக ஆர்வலர்களுக்கு GPM மீடியாவின் கோரிக்கை.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் மீண்டும், மக்களின் நலனை கருத்தில் கொண்டு 14.03.2022 அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மேலும், இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு வரும் விண்ணப்பதாரர்கள் தவறாது தங்கள் ஆதார் அட்டை மற்றும் கைப்பேசி எண்ணுடன் வந்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

GPM மீடியாவின் கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள நமது ஊர் கோபாலப்பட்டிணத்தில் அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகிறது. எனவே  புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் 14.03.2021  திங்கட்கிழமை நடைபெறும் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு நமது ஊருக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை மனுவாக எழுதி பொதுநல அமைப்புகள் அல்லது சமூக ஆர்வலர்கள்  சார்பாக மனுவினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

நமது ஊர் முன்னேற்றம் அடைய 
முயற்சி செய்வோம்.

வாழ்க்கையில் நமக்கு ஊர் என்ன செய்தது என்பதை விட நாம் ஊருக்கு என்ன செய்தோம் என்று சிந்திப்போம்!!!

பொதுநலன் கருதி வெளியிடுவது : கோபாலப்பட்டிணம் மீடியா

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments