புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சியில் சேர தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேசிய கல்விக்கொள்கை 2020-ன்படி தமிழகத்தில் 46 தொழிற்பயிற்சி நிலையங்கள் திறன் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி புதுக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வெல்டிங் ஆபரேட்டர் மற்றும் இரு சக்கர வாகன பழுதுபார்த்தல் தொழிற்நுட்ப வல்லுனர் ஆகிய தொழிற் பிரிவுகளில் குறுகியகால பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கு, கல்வித் தகுதியாக 8-ம் வகுப்பு தேர்ச்சியடைந்தவராகவும், குறைந்த பட்சமாக 14 முதல் 45 வயது உள்ளவராக இருத்தல் வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரி முடித்த அல்லது இடைநின்ற பயிற்சியாளர்கள் பயிற்சியில் சேரலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதால் வேலை இல்லாத மேற்காணும் தகுதி உள்ளவர்கள் இதில் சேர்ந்து பயன்பெறலாம். இதில் சேர விரும்புவோர் புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில முதல்வரை தொடர்பு கொள்ளலாம். மேலும் 04322-221584 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராமர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments