போராட்ட களமாகும் கோட்டைப்பட்டினம்! ஹிஜாப் தடையை எதிர்த்து ஓரணியில் போராட்டம் அறிவிப்பு!!
    
கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் இஸ்லாமிய பெண்கள் தங்களின் உயரிய கடமையாகவும், உரிமையாகவும் அணியக்கூடிய ஹிஜாப் சம்பந்தப்பட்ட அநீதமான ஒரு தலைபட்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தும்,ஒன்றிய பாஷிஷ பாஜக மற்றும் கர்நாடக அரசை கண்டித்தும்

இன்ஷா அல்லாஹ் நாளை 18/03/2022, வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் கோட்டைப்பட்டிணம் செக் போஸ்ட் அருகாமையில், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகள் மற்றும் கோட்டைப்பட்டிணம் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகம் மற்றும் அனைத்து தன்னார்வ இளைஞர்கள் சார்பிலும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.

நமது உரிமையை மீட்டெடுக்கவும், நமது கடமையை நிலைநிறுத்தவும் தன்னெழுச்சியுடனும், ஆர்வத்துடனும், அலை கடலென ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டு, ஆர்பாட்டத்தினை சிறப்பித்து, வலுவூட்டிட அனைத்து இஸ்லாமிய இயக்கம், கட்சி மற்றும் கோட்டைப்பட்டிணம் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகம் சார்பாகவும்  அன்போடு அழைக்கிறோம்.

தகவல்:
அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகள், முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகம் மற்றும் தன்னார்வ இளைஞர்கள், கோட்டைப்பட்டிணம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments