மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் இன்று நடக்கிறது



மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம்
இன்று நடக்கிறது


மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளின் குறைகளை போக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் 3-வது வெள்ளிக்கிழமை மாவட்ட போலீஸ் அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் கடந்த இரு மாதங்களாக அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளால் நடத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று(18-03-2022) (வெள்ளிக்கிழமை) இம்முகாம் நடக்கிறது, மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் தரைத் தளத்தில் வைத்தே அவர்களிடம் போலீஸ் சூப்பிரண்டுகள் புகார் மனுக்களை நேரில் பெற்று மேல் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் புகார் அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கனிவுடன் அணுகவும், அவர்களை முறையாக கையாளுவதற்கான பயிற்சி மாவட்ட அளவில் போலீஸ் ஆளினர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு மூலம் நடத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போது புகார் அளிக்கவரும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் பயிற்சி பெற்ற இரண்டு போலீசார் ஒவ்வொரு மாவட்ட போலீஸ் அலுவலகத்திலும் தொடர்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். மாற்றுத் திறனாளிகள் எந்தவித சிரமமும் இன்றி தங்கள் புகார் மனுவை அளிக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதர தொடர்பு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மாற்றுத் திறனாளிகள் தாங்கள் அளித்த புகார் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கருதும் பட்சத்தில் அவர்கள் டி.ஐ.ஜி. அலுவலகம் திருச்சி (0431-2333909) அலுவலகத்தை தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். அதன் பிறகும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என்று மாற்றுத்திறனாளிகள் கருதும் பட்சத்தில் அவர்கள் மத்திய மண்டல ஐ.ஜி. அலுவலக தொலைபேசி எண் 0431-2333866 மூலம் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments