புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் விளையாட்டுத் திடலை அமைச்சர்கள் திறந்து வைத்தார்கள்




புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் திடலினை மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள்,மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தார்கள்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் திடலினை மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள், மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் ஆகியோர் இன்று (17.03.2022) திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் அவர்கள் பேசியதாவது;
மாண்புமிகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மற்றும் தற்போதைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 2010 ஆம் ஆண்டு காலத்திலேயே புதுக்கோட்டை அரசு மருத்தவக்கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்காக அனைத்து ஏற்பாடுகள் நிறைவுற்றிருந்தது.


மேலும் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், மருத்துவ மாணவ, மாணவியர்களுக்கு விளையாட்டுத் திடல் இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த விளையாட்டுத் திடலில் நாள்தோறும் விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்ளலாம் என மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது;
மாண்புமிகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கடந்த காலத்தில் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமையும் வகையில் மகத்தான திட்டத்தை துவக்கி வைத்தார்கள். அத்தொடக்கத்தின் மூலம் தற்பொழுது தமிழகம்
முழுவதும் மருத்துவக்கல்லூரி அமையப்பெற்று வருகிறது. அதனடிப்படையில் புதுக்கோட்டை அரசு மருத்தவக்கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கு மாண்புமிகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மற்றும் தற்போதைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆகியோர் துவக்கி வைத்தார்கள்.
இந்த விளையாட்டு மைதானத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, கோரிக்கைகள் நிறைவேற்றுவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நாள்தோறும் பயிலும் கல்வியை போன்று, தினமும் இந்த விளையாட்டு மைதானத்தை மருத்துவ மாணவ, மாணவியர்கள் பயன்படுத்த வேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்தியாவிலேயே முதல்முறையாக 2022 - உலக சதுரங்கப் போட்டிக்கான அனுமதியினை பெற்று தந்துள்ளார்கள் என மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள்; பேசினார்.
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, முன்னாள் அரசு வழக்கறிஞர் திரு.கே.கே.செல்லபாண்டியன் அவர்கள், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.பூவதி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments