ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்மருத்துவ மதிப்பீட்டு முகாமில் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்மருத்துவ மதிப்பீட்டு முகாமில்12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.81,000 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் வழங்கினார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் நடைபெற்ற மருத்துவ மதிப்பீட்டு முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் இன்று (17.03.2022) வழங்கினார்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது;

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்; மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தி வருகிறார்கள். அதனடிப்படையில் இன்றையதினம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.81,000 மதிப்பீட்டில் காதொலிக்கருவி, மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான கல்வி உபகரணங்கள், நடைப் பயிற்சி உபகரணங்கள், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர்க்கான சிறப்பு நாற்காலி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், அதிக அளவில் இயலாமையுடைய சிறப்புக் குழந்தைகளும் இல்லம் சார்ந்த கல்வி பெற்றிட, எட்டாம் வகுப்பு நிறைவு செய்த மாற்றுத்திறனுடைய மாணவஃமாணவியர்கள் (Children with Special Needs) ஒன்பது முதல் பன்னிரெண்டு வகுப்பு வரையிலான இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை முழுமையாக பெறும் வகையில் கற்றலுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தி, சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவ ஃ மாணவியர்களுக்கு உள்ளடக்கிய கல்வி (Inclusive Education) வசதி செயல்படுத்தப்பட்டுள்ளது.

முன் தொடக்க நிலை, தொடக்க நிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாற்றுத்திறனுடைய மாணவ ஃ மாணவியர்கள் (பிறப்பு முதல் 18 வயது வரை) மற்றும் தற்போது கள அளவில் புதிதாக சுமார் 13,800 நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இந்த மாற்றுத்திறனுடைய குழந்தைகளின் தேவையைக் கண்டறிவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, பள்ளிகல்வித் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்), வருவாய் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையுடன் இணைந்து முதன் முறையாக ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடத்தப்பட உள்ளது.

இந்த ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம்களின் வாயிலாக, அடையாள அட்டை வழங்குதல், UDID அட்டைக்கான பதிவுகள், கல்வி உதவித் தொகை (மத்திய ஃ மாநில), ALIMCO / CMCHIS / மாற்றுத்திறனாளிகள் நல துறை வாயிலாக வழங்கப்படும் உதவி உபகரணங்கள் வழங்கிடுவதற்கான விவரங்கள் சேகரித்தல், அதிக உதவி தேவைப்படும் குழந்தைகள் கண்டறிதல், சிறப்பு பயிற்சிகள் (தசைப்பயிற்சி ஃ பேச்சுப் பயிற்சி), அறுவை சிகிச்சை, முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்த்தல் போன்ற செயல்பாடுகள் நடத்தப்பட உள்ளது.

எனவே மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் பெறவதற்காக நடத்தப்படும் இதுபோன்ற முகாம்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.சத்தியமூர்த்தி, திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, ஆலங்குடி பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments