புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதிய 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவையினை மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள், மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.




புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில், புதிய 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவையினை, மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள், மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் ஆகியோர் இன்று (17.03.2022) கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களுக்கு உயர்தரத்திலான சிகிச்சை கிடைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மருத்துவ கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறார்கள். மேலும் தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின்கீழ், கடந்த 2008 ஆம் ஆண்டு மாண்புமிகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழகம் முழுவதும் 108 அவசரகால ஊர்தி சேவையினை துவக்கி வைத்தார்கள்.
அதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்சமயம் வரை 108 அவசரகால ஊர்தி சேவை 33 எண்ணிக்கையில் செயல்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு கூடுதல் சேவை வழங்கும் வகையில் புதிதாக 3 எண்ணிக்கையில் 108 அவசரகால ஊர்தி சேவைகள் இன்றையதினம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள், மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் ஆகியோர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
புதிதாக துவக்கி வைக்கப்பட்டுள்ள 3 எண்ணிக்கையில் 108 அவசரகால ஊர்தி சேவைகள் மறமடக்கி, புனல்குளம் மற்றும் ராசநாயக்கன்பட்டி ஆகிய 3 இடங்களிலிருந்து செயல்படும். புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் 108 அவசரகால ஊர்தி சேவைகளில் 5 வாகனங்களில் மேம்படுத்தப்பட்ட அவசரகால சிகிச்சை அளிக்கும் வசதியுடனும், 2 வாகனங்கள் பச்சிளம் குழந்தைகளுக்காகவும், மீதமுள்ள வாகனங்கள் அனைத்தும் அடிப்படை வசதிகளை கொண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் அனைவரும் இச்சேவைகளை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாண்புமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் திரு.எஸ்.ரகுபதி அவர்கள், மாண்புமிகு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர்நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் ஆகியோர் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை.முத்துராஜா அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, முன்னாள் அரசு வழக்கறிஞர் திரு.கே.கே.செல்லபாண்டியன் அவர்கள், இணை இயக்குநர் (ஊரக நலப்பணிகள்) மரு.ராமு, 108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் ரஞ்சித் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments