ஹிஜாப் விவகாரம்: கோட்டைப்பட்டினத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..!!புதுக்கோட்டை மாவட்டம்  கோட்டைப்பட்டிணத்தில் ஹிஜாபுக்கு தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோட்டைப்பட்டினம் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகள் மற்றும் ஜமாஅத் கூட்டமைப்பு நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம், 
ஜமாத் நிர்வாகிகள்  முன்னிலையில், தமுமுக முகமது சாலிகு ஒருங்கிணைக்க ECR பள்ளிவாசலில் துவங்கி செக்போஸ்ட் வாரை மக்கள் திரள் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் முனைவர்.முபாரக் அலி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநில பேச்சாளர் திருச்சி சரீப், எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.  

இதில் டிஎன்டிஜே நிஜாம் கான், எஸ்டிபிஐ அப்துல் காசிம், தமுமுக அபுசாலிஹ், மஜக முஹம்மது ஹாரிஸ், உதவும் கரங்கள் அஜ்மீர் கான் மற்றும் முஸ்லிம் லீக் ஜெகபர் சாதிக் ஆகியோர் கண்டன கோஷங்களை முன்மொழிந்தனர். 

இதில் முஸ்லீம் ஜமாத் (வக்பு), இஸ்லாமிய ஜமாத் (அறக்கட்டளை) நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட ஆண்கள், பெண்கள் என பொதுமக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாகக் கூடி ஒன்றிய பாஜக அரசுக்கும், ஹிஜாபுக்கு தடை விதித்து தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்றத்திற்க்கும் எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். 

இறுதியாக கோட்டைப்பட்டிணம் ஜமாத் செயலாளர் சரிப் அப்துல்லா நன்றி உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோட்டைப் பட்டினம் கடைவீதிகளில் பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். இதையடுத்து, அப்பகு தியில் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு மனோகரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அனைத்து கட்சிகள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஜமாத் கூட்டமைப்பு - கோட்டைப்பட்டிணம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments