கோபாலப்பட்டிணத்தில் சுட்டெரிக்கும் வெயில்
கோபாலப்பட்டிணத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. இதனால் பொதுமக்கள் மதிய வேளையில் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பகலில் வாட்டி வதைக்கும் வெயிலின் தாக்கம் மாலை வரை நீடிக்கிறது. 
இதனால் மின்விசிறி இல்லாமல் வீட்டில் தூங்க முடியாது என்ற நிலை உருவாகி உள்ளது. கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்கினி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

 மக்கள் வெயிலிலிருந்து தங்களை தற்காத்துகொள்ள  இளநீர், தர்பூசணி, சர்பத், ஐஸ் மோர், கரும்பு ஜூஸ் உள்ளிட்டவற்றை விரும்பி வாங்கி பருகி வருகின்றனர். இதனால் இளநீர், தர்பூசணி விற்பனை மும்முரமடைந்து உள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments