திருச்சி-மானாமதுரை இடையே மீண்டும் முன்பதிவில்லா டெமு சிறப்பு ரெயில் சேவை




கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து தினமும் மானாமதுரைக்கு சென்று வந்த டெமு ரெயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் மீண்டும் திருச்சியில் இருந்து மானாமதுரைக்கும், பின்னர் மறுமுனையில் இருந்து திருச்சிக்கும் முன்பதிவில்லா டெமு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக திருச்சி ரெயில்வே கோட்ட அலுவலகம் ரெயில் புறப்படும் நேரம், வரும் நேரத்திற்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-




திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து மானாமதுரைக்கு (வண்டி எண்:06829) காலை 9.45 மணிக்கு ரெயில் புறப்பட்டு பகல் 12.50 மணிக்கு மானாமதுரை ஜங்ஷன் ரெயில் நிலையத்தை அடைகிறது. இந்த ரெயில் குமாரமங்கலம், கீரனூர், வெள்ளனூர், புதுக்கோட்டை, திருமயம், செட்டிநாடு, கோட்டையூர், காரைக்குடி, தேவகோட்டை ரோடு, கல்லல், பொனான்குடி, சிவகங்கை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதுபோல மறுமுனையான மானாமதுரையில் இருந்து (வண்டி எண்: 06830) பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தடைகிறது. இந்த டெமு சிறப்பு ரெயிலில் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments