ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் பிவிசி பைப் லைன் மற்றும் மின் மோட்டார் வழங்கும் திட்டம்
தமிழக அரசு தாட்கோ மூலமாக ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நீர்ப்பாசனத்திற்கு பிவிசி குழாய்கள் வாங்க ரூ.15,000ஃ- மானியமாகவும், புதிய மின் மோட்டார் வாங்க ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மட்டும் ரூ.10,000ஃ- மானியமாகவும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. விண்ணப்பதாரர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும்.

தாட்கோ மானிய திட்டத்தில் பயன்பெறாத எஸ்.சி., எஸ்.டி., சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கும் மற்றும் துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் பிவிசி குழாய் அமைக்க ஏற்கெனவே மானியம் பெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் இத்திட்டத்தில் பயன்பெற இயலாது.

மேலும், ஏற்கனவே தாட்கோ மூலம் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் துரித மின் இணைப்பு திட்டம் ஆகிய திட்டங்களில் பயன்பெற்றிருந்தாலும் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். விண்ணப்பதாரர் தங்களது சாதிசான்று, வருமானசான்று, குடும்ப அட்டை, இருப்பிட சான்று, சிட்டா, பட்டா, அடங்கல், அ-பதிவேடு, புலப்பட வரைபடம், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி ஆகியவற்றுடன் ஆதிதிராவிடர்
 விவசாயிகள் http://www.application.tahdco.com என்ற இணையதளம் மூலமும், பழங்குடியின விவசாயிகள் http://fast.tahdco.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாய்ப்பினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இது தொடர்பான மேலும் விவரங்கள் அறிய, புதுக்கோட்டை, காட்டு புதுகுளம், பஞ்சாயத்து யூனியன் அலுவலக சாலை, தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகம் மற்றும் தாட்கோ, மாவட்ட மேலாளரை நேரிலோ அல்லது 04322-221487 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments