ராமேசுவரம் - செகந்திராபாத் வாராந்திர சிறப்பு ரயில் சேவை ஜுலை வரை நீட்டிப்பு.




ராமேசுவரம் - செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் மார்ச் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதனுடைய சேவை ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ராமேசுவரம் - செகந்திராபாத் விரைவு சிறப்பு ரயில் (07686) ராமேசுவரத்திலிருந்து ஏப்ரல் 7, 16, 21, 28 மே 5, 12, 19, 26 ஜூன் 2, 9, 16, 23, 30 ஜூலை 7, 14, 21, 28 ஆகிய வியாழக்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை காலை 07.10 மணிக்கு செகந்திராபாத் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் செகந்திராபாத் - ராமேசுவரம் வாராந்திர விரைவு சிறப்பு (07685) ரயில் செகந்திராபாத்தில் இருந்து ஏப்ரல் 5, 12, 19, 26 மே 3, 10, 17, 24, 31 ஜூன் 7, 14, 21, 28 ஜூலை 5, 12, 19, 26 ஆகிய செவ்வாய் கிழமைகளில் இரவு 09.25 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் அதிகாலை 03.10 மணிக்கு ராமேசுவரம் வந்து சேரும்.


தமிழகத்தில் இந்த ரயில் காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.



இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.

செகந்திராபாத்⇋ராமேஸ்வரம் வழி புதுக்கோட்டை ரயிலில் நாளை முதல் முன்பதிவில்லா பெட்டிகள்  அறிமுகம்!




நாளை(22/03/22) முதல் 07685/செகந்திராபாத்-ராமேஸ்வரம் வழி புதுக்கோட்டை வாராந்திர சிறப்பு ரயிலுக்கு முன்பதிவில்லா பயணச்சீட்டு(Unreserved Ticket ) வழங்கப்படும். இதன் மூலம் இந்த ரயிலுக்கு உடனடியாக டிக்கெட் எடுத்து முன்பதிவில்லா பெட்டிகளில்(Unreserved coaches)  பயணிக்கலாம்.

வரும்(25/03/22) முதல் 07686/ராமேஸ்வரம்-செகந்திராபாத் வழி புதுக்கோட்டை வாராந்திர வாராந்திர சிறப்பு ரயிலுக்கு முன்பதிவில்லா பயணச்சீட்டு(Unreserved Ticket ) வழங்கப்படும். இதன் மூலம் இந்த ரயிலுக்கு இனி உடனடியாக டிக்கெட் எடுத்து முன்பதிவில்லா பெட்டிகளில்(Unreserved coaches) பயணிக்கலாம்.

கீழே இந்த ரயிலுக்கான முன்பதிவில்லா பயணச்சீட்டு விலை(Unreserved Ticket Rate ) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயிலுக்கு ரயில் நிலைய டிக்கெட் கவுன்டர்களில் மட்டுமே பெறமுடியும்,  

குறிப்பு:- UTS மொபைல் செயலியில் இந்த ரயிலுக்கு மட்டும் முன்பதிவில்லா(Unreserved)டிக்கெட் பெற இயலாது. என்பது குறிப்பிடத்தக்கது

நன்றி : Pudukottai Rail Users

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments