கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு இடங்களில் "கோபாலபட்டினம்" ஊர் பலகை அமைப்பு




கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு இடங்களில் புதிதாக "கோபாலபட்டினம்"
ஊர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கிழக்கு கடற்கரை சாலையில் சிறு நகராக உள்ளது மீமிசல். திருச்சி, புதுக்கோட்டை, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை,  தேவகோட்டை, காரைக்குடி,  உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் மீமிசல் பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்புகின்றன. இது தவிர இராமேஸ்வரம், இராமநாதபுரம், சாயல்குடி, திருப்புனவாசல், வேதாரண்யம், வேளாங்கன்னி, ஏர்வாடி, சிதம்பரம், புதுச்சேரி மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கேரளாவிற்கு செல்லும் பேருந்துகளும் மீமிசல் வழியாகவே சென்று வருகின்றன. தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் மீமிசலை கடந்து செல்கின்றன.






புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கோபாலப்பட்டிணம் கிராமம் உள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோபாலப்பட்டிணம் ஊர் பெயர் பலகை ஒன்று ஏற்கனவே வைக்கப்பட்டுள்ளது.   

கோட்டைப்பட்டிணம் , ஜெகதாப்பட்டிணம் பகுதியில் இருந்து வருபவர்களுக்கு மட்டுமே கோபாலப்பட்டிணம் ஊர் பலகை தெரியும் வகையில் இருந்தது. மீமிசலில் இருந்து வரும் வாகனத்திற்கு கோபாலப்பட்டிணம் ஊர் பெயர் பலகை இல்லாமால் இருந்து வந்தது.

இரண்டு இடங்களில் வைப்பு

இந்நிலையில் கோபாலப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலையில் இரண்டு இடங்களில் ஊர் பெயர் பலகை நெடுஞ்சாலை துறை சார்பில் வைக்கப்பட்டது.

புதிதாக வைக்கப்பட்டுள்ள ஊர் பெயர் பலகையில் கோபாலப்பட்டிணம் செல்வதற்கான அம்புக்குறியிட்டு காட்டப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments