SDPI கட்சியின் சார்பாக சிறந்த ஆளுமைகளை கௌரவிக்கும் விதத்திலும், ஊக்குவிக்கும் வகையிலும் கடந்த 5 ஆண்டுகளாக உரியவர்களை தேர்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்து வருகின்றது. அதன்படி இந்த ஆண்டும் (2022) சிறந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விருதுக்கு தகுதி வாய்ந்தவர்களை பரிந்துரை செய்யக்கூடியவர்கள் 2022, ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
விருதுகளும் - தகுதிகளும்
1. டாக்டர் அம்பேத்கர் விருது - ஒடுக்கப்பட்டோர் நலனுக்காக பாடுபடுபவர்களில் ஒருவருக்கு.
ஒடுக்கப்பட்ட சமூகங்களான தலித்கள், பழங்குடியின மக்கள், முஸ்லிம்கள் இவர்களின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து களப்பணியாற்றக் கூடியவராக இருக்க வேண்டும். அதில் அந்தந்த சமூக மக்கள் நன்மை பெற்றிருக்க வேண்டும்.
2. தந்தை பெரியார் விருது - மனித உரிமை களத்தில் தொடர்ந்து பணியாற்றி வருபவர்களில் ஒருவருக்கு.
பாதிக்கப்பட்டவருக்காகவோ, பொது சமூகத்தின் நீதிக்காகவோ போராடக்கூடியவராக இருக்க வேண்டும்.
3. காமராஜர் விருது - கல்வி சேவை புரிந்தவருக்கான விருது.
கல்வியை சேவையாக வழங்குபவர். வறியவர்களின், ஒடுக்கப்பட்டோரின் கல்வி உயர்வுக்காக போராடுபவர். கல்வித்துறையில் சிறந்து பணியாற்றுபவர். கல்வித்துறையில் உள்ள சீர்கேடுகளை அகற்ற போராடுபவர்களாக இருக்க வேண்டும்.
4. காயிதே மில்லத் விருது - சிறந்த பொது வாழ்விற்கான விருது.
பொது வாழ்வில் நேர்மை-தூய்மை மக்கள் தொண்டு, சமூக சமுதாய பணி செய்பவர்களாக இருக்க வேண்டும்.
5. பழனி பாபா விருது - பாசிச அடக்குமுறைக்கு எதிராக களம் கண்டவர்கள்
பாசிச மற்றும் மதவெறி சக்திகள் எதிர்ப்பு களத்தில் தொடர்ந்து சமரசமின்றி குரல் கொடுப்பவர்களாக இருக்க வேண்டும்.
6. நம்மாழ்வார் விருது - சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாட்டிற்கான விருது.
சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான பணிகள்-போராட்டங்கள்-செயல்திட்டங்கள் இவற்றில் சிறந்து விளங்குபவர்களாக இருக்க வேண்டும்.
7. அன்னை தெரசா விருது - சமூக சேவைக்கான விருது.
சமூக சேவைப்பணிகளில் சாதிப்பவர்கள். சிறந்து விளங்குபவர்கள். உதாரணமாக மாற்றுத்திறனாளிகள், அனாதைகள், நோயாளிகள் இதுபோன்று பாதிக்கப்பட்டோர். கீழ்நிலையில் உள்ளோருக்காக தன்னலம் பாராமல் உழைக்கும் நபர்களாக இருக்க வேண்டும்.
8. கவிக்கோ விருது - தமிழ், இலக்கியம்-எழுத்து-வரலாறு- இவைகளில் சிறந்து விளங்குவதற்கான விருது.
சிறந்த கவிதை, இலக்கிய நூல், கட்டுரை தொகுப்புகள் சிறந்த தமிழ் தொண்டு - இவைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருக்க வேண்டும்.
தங்கள் பரிந்துரைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
SDPI விருது தேர்வுக்குழு 2022
SDPI கட்சி தலைமை அலுவலகம்
4 / 7, இப்ராஹிம் சாஹிப் தெரு,
மண்ணடி, சென்னை - 600 001
தொலைப்பேசி: 044 25230136
மின்னஞ்சல்: sdpiaward@gmail.com
வாட்ஸ் அப்: 93810 40078
இப்படிக்கு
அச.உமர் பாரூக்
மாநில பொதுச்செயலாளர்
SDPI கட்சி, தமிழ்நாடு
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.