புதுக்கோட்டைத்தில் தாயை எரித்துக் கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகள் சிறை





புதுக்கோட்டை அருகே குடிப்பதற்கு பணம் தராத தாயை எரித்துக் கொன்ற மகனுக்கு 40 ஆண்டுகாலம் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மருதாந்தலை பகுதியைச் சேர்ந்த துரைசாமி என்பவரது மகன் சந்தோஷ் (26). இவர், கடந்த 2021 ஆம் ஆண்டு தனது தாய் லீலாவதியிடம் (55) மதுகுடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு தாய் லீலாவதி பணம் கொடுக்க மறுத்து நீ உயிரோடு இருப்பதற்கு செத்துவிடலாம் என்று கூறியுள்ளார்.

இதற்கு 'நான் ஏன் சாக வேண்டும்; நீ தான் சாகவேண்டும்' என்று கூறிய சந்தோஷ் தாய் என்று கூட பாராமல் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு அவர் தப்பிக்காமல் இருக்க கட்டிவைத்து உள்ளார். அதில் 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லீலாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் லீலாவதி அளித்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தோஷை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதையடுத்து சந்தோஷ் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், இந்த ஆயுள் தண்டனையில் எந்தவித சலுகையும் அரசு வழங்காமல் 40 ஆண்டுகாலமுமு தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தான் செய்த தவறை உணர்ந்து திருந்த மூன்று மாதகாலம் தனிமை சிறையில் வைக்கவும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து குற்றவாளி சந்தோஷ் போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும் இந்த வழக்கில் குற்ற சம்பவம் நடந்து ஏழு மாதகாலத்தில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments