கீரனூர் அருகே நடுவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரெயில் கீரனூர் அருகே நடுவழியில் நின்ற எக்ஸ்பிரஸ் ரெயில்

கீரனூர் அருகே என்ஜின் கோளாறால் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நின்றது

அஜ்மீரிலிருந்து ராமேஸ்வரத்துக்கு ஹம்ஷபர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ரெயில் நிலையம் அருகே நேற்று மதியம் வந்தபோது என்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில், ரெயில்வே அதிகாரிகள் புதிய என்ஜினுடன் கீரனூர் புறப்பட்டு வந்தனர். பின்னர் பழுதடைந்த ரெயில் என்ஜின் மாற்றப்பட்டு அங்கிருந்து சுமார் 3 மணி நேரம் தாமதமாக ராமேஸ்வரத்துக்கு புறப்பட்டு சென்றது. இதன் காரணமாக அந்த ரெயிலில் பயணம் செய்த பயணிகள் அவதிப்பட்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments