ரமலான் நோன்பு வருவதால் கோபாலப்பட்டிணத்தில் எரியாத தெரு விளக்குகளை போர்க்கால அடிப்படையில் ஊராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும் - GPM மீடியா கோரிக்கை




ரமலான் நோன்பு காலங்களில் இரவு நேர தொழுகைக்காக பொதுமக்கள் பள்ளிவாசல்களுக்கு சென்று வருவதால் கோபாலப்பட்டிணம் முழுவதும் எரியாமல் உள்ள தெரு விளக்குகளை போர்க்கால அடிப்படையில் ஊராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும்‌ என GPM மீடியா கோரிக்கை விடுக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி, மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில்  சுமார் ஐந்தாரயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஐந்து பள்ளிவாசல்கள் இருக்கின்றது. ரமலான் நோன்பு காலத்தில் இரவு நேரத்தில் பள்ளிவாசல் உட்பட ஆறு இடங்களில் தராவீஹ் தொழுகை
 நடைபெறும். இரவு நேர தொழுகைக்காக பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள் பள்ளிவாசல்களில் தொழுகையை முடித்துவிட்டு வீடுகளுக்கு செல்வார்கள். அவர்கள் அச்சமின்றி சென்று வர எரியாத தெரு விளக்குகளை உடனடியாக சரி செய்ய வேண்டி GPM மீடியாவின் வாயிலாக  நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மன்றத்தை கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் கோபாலப்பட்டிணம் முழுவதும் எரியாமல் உள்ள தெரு விளக்குகளை போர்க்கால அடிப்படையில் ஊராட்சி நிர்வாகம் பழுது பார்த்து புதுப்பிக்கும்படி ஊர் மக்கள், சமூக ஆர்வலர்கள் சார்பிலும் கேட்டுக்கொள்கின்றோம்.

கோபாலப்பட்டிணம் பொதுமக்களுக்கு GPM மீடியாவின் அன்பான வேண்டுகோள்:

இயற்கை எழில்மிகு அழகிய கிராமமான 
 நமது ஊர் கோபாலப்பட்டிணத்தில் உள்ள வீடுகளில் வளர்ந்திருக்கும் மரங்களின் கிளைகள் மின்கம்பிகளில் உரசிக் கொண்டிருக்கிறது.எனவே மின் கம்பிகளில் மரக்கிளைகள்  உரசுவதால் அடிக்கடி மின்பழுது ஏற்பட்டு இதுவே மின்சாரம் அடிக்கடி தடைபட காரணமாக அமைகிறது. எனவே உங்கள் வீடுகளில் உள்ள மரங்களின் கிளைகள் மின்கம்பியில் உரசும்படி இருந்தால் அதை உடனடியாக அகற்றுமாறு  GPM மீடியா சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

நமது ஊர் கோபாலப்பட்டிணத்தை  சேர்ந்த வெளிநாடு வாழ்,வெளியூர் வாழ் மற்றும் உள்ளூர் வாழ் சகோதரர்கள் தங்கள் குடும்ப உறவுகளிடம் இந்த செய்தியை பகிர்ந்து அறிவுரைகள் வழங்கவும் கேட்டுக்கொள்கிறோம்.

ஊர் அக்கறையுடன்....
GPM மீடியா குழு,
கோபாலப்பட்டிணம்.
மீமிசல்
ஆவுடையார்கோவில் தாலுகா
புதுக்கோட்டை மாவட்டம்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments