இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அரசு பள்ளி ஆசிரியர் பணியிட மாறுதல்; கதறி அழுத மாணவர்கள்






இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இடமாறுதலில் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியரைப் பிரிய மனமில்லாமல் மாணவ மாணவிகள் கண்ணீர் மல்க வழி அனுப்பிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டை மேட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 2014ஆம் ஆண்டு முதல் வணிகவியல் துறை ஆசிரியராக பணியாற்றி வந்தார் மணிகண்டன். இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக விருதுநகர் மாவட்டம் காரியாபட்டிக்கு பணிமாறுதல் உத்தரவு பெற்றார். பணிமாறுதல் உத்தரவைப் பெறப் பள்ளிக்கு வந்த ஆசிரியர் மணிகண்டனுக்கு பள்ளி மாணவ மாணவிகள் கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்து அனுப்பினர்.

மாணவ மாணவிகளிடம் மரியாதையுடன், அன்புடன் பழகும் ஆசிரியர் மணிகண்டன், மாணவர்களுடன் சகோதரத்துவத்துடன் பழகி வந்தார். ஆசிரியரைப் பிரிய மனமில்லாமல் கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்பட்டுள்ளது.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments