கோபாலப்பட்டிணத்தில் ஐந்து மாதங்களாக இருள் சூழ்ந்து காணப்படும் நெடுங்குளம் பிரதான சாலை! ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை!!
கோபாலப்பட்டிணத்தில் கடந்த ஐந்து மாதங்களாக எரியாத தெரு விளக்கினை சரி செய்ய வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கோபாலப்பட்டிணத்திற்கு செல்லும் பிரதான சாலை அமைந்துள்ளது. கோபாலப்பட்டிணத்தில் இருந்து மீமிசல் செல்வதற்கும், வெளியூரில் இருந்து கோபாலப்பட்டிணம் பகுதிக்கும், கடற்கரை பகுதிக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது. 

கடந்த ஐந்து மாதங்களாக இந்த பகுதியில் தெரு விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மேலும் இரவு நேரங்களில் மீமிசல் சென்று வரக்கூடிய பெண்கள், வயதானோர் அந்த வழியாக வருவதற்கு அச்சமடைந்துள்ளனர்.

தற்போது உள்ள சூழலில் ஆங்காங்கு திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகின்ற காலகட்டத்தில் இப்பகுதியில் தெருவிளக்கு இல்லாமல் இருப்பது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் கூறியும் எரியாத மின் விளக்குகளை சரி செய்யாமல் அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

இரவு நேரங்களில் மையத்தை அடக்கம் செய்ய செல்லும் போது சாலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வயதானோர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஆகையால் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நெடுங்குளம் பிரதான சாலையில் எரியாத மின் விளக்குகளை சரி செய்து கொடுத்து கிராம மக்களின் நலனை காக்க வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 27.12.2022 அன்று GPM மீடியாவில் இதுகுறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

27.12.2022 அன்று வெளியிட்ட செய்தியைக் கான கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

Link 👇👇👇

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments