திருவாரூர்- காரைக்குடி மார்க்கத்தில் மற்றொரு டெமு ரயில் இயக்க பயணிகள் வலியுறுத்தல்


திருவாரூரில், டெமு ரயில் புறப்படும் அதே நேரத்தில் காரைக்குடி லிருந்தும் மற்றொரு ரயில் திருவாரூர் நோக்கி கிளம்பி வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணி கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

திருவாரூர் காரைக் குடி மார்க்கத்தில் திருவாரூரிலிருந்து காலை 8.15 க்கு இயக் கப்படும் டெமு ரயில் சுமார் மூன்றரை மணி நேரத்தில் காரைக்குடி சென்றடைகிறது. பின்னர் மாலை 4 மணிக்கு அங்கிருந்து ரயில் புறப்பட்டு திருவாரூர் வந்தடைகி றது. ரயிலின் வேகம் இப்போது அதிகரிக்கப் பட்டுள்ளதால் பயணிக ளிடம் ரயில்வே நிர்வாகம் எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூலிக்கிறது.

இந்நிலையில் பள்ளி மாணவர்கள், தொழிலா ளர்கள், வியாபாரிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் நலன்கருதி காரைக்குடி யிலிருந்தும் தினசரி காலை இதே நேரத்தில் (காலை 8.15 மணி) திருவாரூர் நோக்கி வரும் வகையில் ரயில் இயக்கப்பட வேண்டும் என உள்ளூர் வெளியூர் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்குடி தடத்தில் சென்னை, ராமேஸ்வரம் செல்ல வசதியாக விரைவு ரயில்களை இயக்க வேண்டும்.

திருவாரூரில் இருந்து அதிகாலையில் தஞ்சை, திருச்சி வழியாக கோவை செல்ல ஒரு விரைவு ரயிலும்,  திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை, விழுபபுரம் வழியாக செங்கல் பட்டுவரை ஒரு விரைவு ரயில் இயக்கப் பட வேண்டும்.

அதேபோன்று மாலை 6 மணிக்கு மேல் திருச்சியிலிருந்து திருவாரூர் வரை பயணிகள் ரயிலை இயக்குவதோடு. திருவாரூரில் மூடப்பட்டுள்ள பார்சல் ஆபீஸ் மீண்டும் செயல் பட ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பயணிகள் வலியுறுத்தி யுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments