3 நாட்கள் வறுத்தெடுக்கப் போகும் வெயில்.. வானிலை ஆய்வு மையம் “எச்சரிக்கை”.. செய்ய வேண்டியவை! கூடாதவை


 தமிழகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் கோடை காலத்தில் மக்கள் தங்களை காத்துக் கொள்ளும் வகையில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை என்ன என்பதை பற்றி பார்க்கலாம்..

சூரியனில் வெப்பப் பேரலை நிகழ்வு ஏற்பட்டதன் எதிரொலியால் ஓரிரு நாட்களில் சூரிய புயல் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தின் கடந்த நில நாட்களாக வழக்கம் போல் கோடைக்காலத்திற்கு முன்னதாகவே வெயில் சுட்டெரிக்கிறது. தினமும் 30 முதல் 35 டிகிரி செல்சியல் வரை வெப்பநிலை உள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

சுட்டெரிக்கும் வெயில்
இதனால் மக்கள் கோடை வாசஸ்தலங்களுக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் குளிர்பானங்கள் மற்றும் பழ வகைகளை நாடுவதால் அவற்றின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. சாலையோர கடைகள் முதல் மால்கள் வரை கோடை 'விற்பனை' அதிகரித்துள்ளது. வெள்ளரி, இளநீர், தர்ப்பூசனி, நுங்கு உள்ளிட்டவற்றையும் மக்கள் ஆர்வத்துடன் வாங்கி உண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் வெளியில் செல்லும் மக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குறிப்பாக வெளியில் செல்லும் முதியவர்கள் குழந்தைகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

செய்ய வேண்டியவை

வெயிலில் இருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும், தாகம் இல்லை என்றாலும் அதிகபட்சமாக ஆறு லிட்டர் வரை தினமும் தண்ணீர் பருக வேண்டியது மிகவும் அவசியம். உடலில் நீர்ச்சத்தை பராமரிக்கும் வகையில் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட எலுமிச்சை ஜூஸ் மோர் இளநீர் பருகலாம். மேலும் கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்களை விட வீட்டிலேயே தயாரிக்கப்படும் குளிர்பானங்கள் சுத்தமானவை மற்றும் சுகாதார குறைவு என்பதால் நம்பகத்தன்மை வாய்ந்தது. கருப்பு போன்ற வண்ணங்களில் உடைகள் அணிவதைத் தவிர்த்து வெள்ளை மற்றும் வெளிர் கொண்ட தளர்வான பருத்தி ஆடைகளை அணிவதால் வெயிலில் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.

அதே நேரத்தில் வெளியில் செல்லும்போது தலைக்கவசம் அணிவது தொப்பி மற்றும் குடையை பயன்படுத்துவது அவசியம். வாகனம் ஓட்டும் போது தலைக்கவசம் அணிவது உயிரை மட்டும் அல்ல வெயிலிலிருந்து தலையையும், உங்களையும் காக்கும். வெயில் காலத்தில் வயதானவர்கள் , குழந்தைகள் , நோய்வாய்ப்பட்டவர்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக அவர்கள் வெளியில் செல்வதை தவிர்ப்பது நல்லது.வெயில் உச்சத்தில் இருக்கும் 11 மணி முதல் மாலை 4 மணி வரை முடிந்தளவு வெளியில் சுற்றுவதைத் தவிர்க்கலாம்.

தவிர்க்க வேண்டியவை

மேலும் வெயில் காலங்களில் தேவையில்லாமல் அதிக அளவு உடல் உழைப்பைத் தருவது, அல்லது வெறும் காலுடன் வெளியே செல்வது உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் வீட்டில் காற்றோட்டம் நன்றாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். வெயில் காலங்களில் மதுவகைகள், டீ, காபி மற்றும் கார்பனேட்டட் குளிர்பானங்களை தவிர்ப்பது உடல் நீர் இழப்பை குறைக்கும். அதிகளவு வெப்பமூட்டும் தொழிற்சாலைகள் மற்றும் கணினி பயன்பாடு மேற்கொள்ளும் நபர்கள் அடிக்கடி சிறிது இடைவெளி கொடுத்து பணியாற்றுவது நல்லது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments