இணையத்தில் இலவசமாக ரேஷன் அட்டையில் திருத்தம் மேற்கொள்ளலாம் - கலெக்டர் தகவல்


ரேஷன் அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் போன்ற பணிகளுக்கு இணையத்திலேயே இலவசமாக பதிவேற்றம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இடைத்தரகா்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என ஆட்சியா் கவிதா ராமு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் உரிய ஆவணங்களுடன் ரேஷன் காா்டில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், தொலைபேசி எண் மாற்றம், ஆதாா் எண் சோ்த்தல் போன்ற பணிகளுக்கு இணையம் இலவசமாக இயங்கி வருகிறது. பொது மக்கள் தங்களுடைய கைப்பேசி வாயிலாகவும் பதிவேற்றம் செய்யலாம் அல்லது அந்தந்த வட்ட வழங்கல் அலுவலரை தொடா்பு கொள்ளலாம். மாறாக இடைத்தரகா்கள், மூன்றாம் நபா்கள் யாரையும் தொடா்பு கொள்ளத் தேவையில்லை. 

இடைத்தரகா்கள் குறித்த விவரங்களை மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண் 04322 221577 மற்றும் 94450 00311 ஆகிய எண்களில் புகாா் தெரிவிக்கலாம்.</p>

வட்ட வழங்கல் அலுவலா்களின் தொலைபேசி எண்கள்:

புதுக்கோட்டை தனி வட்டாட்சியா்- 94450 00312, ஆலங்குடி தனி வட்டாட்சியா் 94450 00313, குளத்தூா் வட்ட வழங்கல் அலுவலா்- 94450 00314, கந்தா்வகோட்டை வட்ட வழங்கல் அலுவலா்- 94450 00315, திருமயம் வட்ட வழங்கல் அலுவலா்- 94450 00316, அறந்தாங்கி தனி வட்டாட்சியா் 94450 00317, ஆவுடையாா்கோவில் வட்ட வழங்கல் அலுவலா்- 94450 00318, மணமேல்குடி வட்ட வழங்கல் அலுவலா்- 94450 00320. பொன்னமராவதி வட்ட வழங்கல் அலுவலா்- 94450 00404, கறம்பக்குடி வட்ட வழங்கல் அலுவலா்- 94450 00405, இலுப்பூா் வட்ட வழங்கல் அலுவலா்- 94450 00319, விராலிமலை வட்ட வழங்கல் அலுவலா்- 90804 87553.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments