காரைக்காலில் இருந்து மதுரைக்கு டெமு ரயில் இயக்க வேண்டும் புதுச்சேரி MPயிடம் காரைக்கால் நலனில் நாம் பொது நலச் சங்கம் கோரிக்கை


காரைக்காலில் இருந்து மதுரைக்கு டெமு ரயில் இயக்க வேண்டும் புதுச்சேரி MPயிடம்  காரைக்கால் நலனில் நாம் பொது நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காரைக்கால் நலனில் நாம் பொது நலச் சங்கம் வெளியிட்டுள்ள குறிப்பில்

1. கொரோனா காலம் முடிந்து இயல்பு நிலை திரும்பியதும் மற்ற ஊர்களில்
மீண்டும் அனைத்து இரயில்களும் இயங்குவது போல்
கொரோனா காலம் முன்பு காரைக்காலிலிருந்து இயங்கிய அனைத்து
இரயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும்

2. காரைக்கால் - பேரளம் வழி ரயில்வே பணிகளை துரிதப்படுத்தி விரைவில் போக்குவரத்தை துவக்க ஆவண செய்யவேண்டும். 

3. காரைக்காலிலுருந்து - மதுரை வழியாக கொல்லத்திற்கு புதிதாக ரயில் சேவை தொடங்கவேண்டும்.

4.காரைக்கால் - நாகை திருவாரூர் காரைக்குடி வழியாக மதுரைக்கு டெமு இரயில் இயக்க ஆவண செய்யவேண்டும்.

5. காரைக்கால் இரயில் நிலையத்தில் பார்சல்கள் பெரிய அளவில் கையாளும் நிலையை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments