தமிழ்நாட்டில் 1 முதல் 5 -ம் வகுப்புகளுக்கு இறுதித் தேர்வு கிடையாது எனத் தகவல் வெளியான நிலையில், “ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை இந்த ஆண்டு இறுதித்தேர்வு உண்டு” என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம், `ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு பள்ளி இறுதித் தேர்வு இல்லை’ என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது. அந்த அறிவிப்பில், `6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு மே 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறும். ஒன்பதாம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் மே 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை நடைபெறும்.
போலவே, நடப்புக் கல்வியாண்டுக்கான இறுதி வேலை நாள் மே 13 ஆம் தேதி என்றும், 2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13 ஆம் தேதி தொடங்கும். அதேநேரத்தில் 11 ஆம் வகுப்பு மட்டும் ஜூன் 24 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கும்’ என கூறப்பட்டது
இந்த அறிவிப்புகள் தொடர்ச்சியாக வெளிவந்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது 1-5 ஆம் வகுப்புகளுக்கு இறுதித் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். “ 1-5 ம் வகுப்புகளுக்கு இறுதித்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். ஆனால் குறைந்த பாடத்திட்டத்திலேயே தேர்வுகள் நடத்தப்படும்” என்று அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று (ஏப்.3) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"நிகழ் ஆண்டு குறைந்த நாட்களே மாணவர்கள் பள்ளிக்கு வரும் சூழ்நிலை இருந்ததால், பாடத் திட்டத்திட்டம் ஏற்கனவே குறைக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில்தான் தேர்வு நடைபெற உள்ளது.
1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையில் இந்த ஆண்டு இறுதித் தேர்வு நிச்சயம் நடைபெறும். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தேர்வு குறித்து இன்று மாலை அறிவிப்புகள் வெளியாகும். தமிழக முதல்வரின் டெல்லி பயணம் வெற்றி அடைந்துள்ளது.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு சட்டப் போராட்டம் நடத்தி விலக்கு பெறுவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஜூலை 17-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு அதற்கான எல்லா ஹைடெக் பயிற்சிகளையும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம்" என்று தெரிவித்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.