10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்டை நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம் - பள்ளிக் கல்வித்துறை


10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 6-ம் தேதி தொடங்கி மே 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு வருகிற மே 5-ம் தேதி தொடங்கி மே 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் பிளஸ்-1 தேர்வு மே 9-ந் தேதி ஆரம்பிக்கப்பட்டு மே 31 வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை நாளை 22.04.2022 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

10, 11 ,12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கண்காணிப்பு பணிகளுக்கு அதிகாரிகளை நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பொதுத்தேர்வு நடைபெற உள்ள 38 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக அதிகாரிகளை பள்ளிக்கல்வித்துறை நியமித்துள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments