ஆற்றங்கரை முஸ்லிம் ஜமாத் சார்பாக சமூக நல்லிணக்க வழியுறுத்தி சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி
ஆற்றங்கரை முஸ்லிம் ஜமாத் சார்பாக சமூக நல்லிணக்க வழியுறுத்தி சமத்துவ இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. 19.04.2022 அன்று இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தாலுகா ஆற்றங்கரை முஸ்லிம் ஜமாத் சார்பாக நோன்பு 17 பத்ர் போர் முன்னிட்டு சமூக நல்லிணக்க வழியுறுத்தி மாபெரும் சமத்துவ இஃப்தார் ஆற்றங்கரை முஸ்லிம் ஜமாத் தலைவர் ஹாஜி.K.P.சவுகார் தலைமையில் இஸ்லாமிய வாலிபர் சங்க நிர்வாகிகள் முன்னிலையில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு நடைபெற்றது

சிறப்புரை;திவான் ஆலிம்(பேஷ் இமாம்) சிறப்பு அழைப்பாளராக; ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் எஸ். முகமது அலி ஜின்னா மற்றும் கிராம நிர்வாக அதிகாரி கார்த்தி ஸ்வரி,திமுக மாவட்ட பிரதிநிதி கோவிந்த மூர்த்தி, முன்னாள் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவர் தஸ்தகீர்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பக்கீர் தேவர்,வார்டு உறுப்பினர் நாகராஜ், கிறிஸ்தவ சமூகத் தலைவர்கள், இளைஞர்கள் இந்து சமூக நிர்வாகிகள் ராமச்சந்திரன்,கந்தையா ஊராட்சி செயலர் பி.கண்ணன்,தலையாரி கருணாமூர்த்தி உட்பட பல்வேறு ஆற்றங்கரை முஸ்லீம் ஜமாத் மற்றும் கிறிஸ்தவ,இந்து சமூக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள் நன்றியுரை;மு.நாகூர் கனி{முஸ்லிம் ஜமாத் செயலாளர்} இந்நிகழ்வினை ஆற்றங்கரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அ.நூருல் அஃபான்,சமூக ஆர்வலர்கள் சீனி,சகுபர் அலி,சரபு மற்றும் இஸ்லாமிய வாலிபர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக இருந்து ஏற்பாடு செய்தனர் கள்......


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments