தஞ்சாவூர் அருகே நடந்த தேர்திருவிழாவில் சோகம்: மின்சாரம் பாய்ந்து 10 பேர் உயிரிழப்பு






தஞ்சாவூர் அருகே தேர்திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்ததில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை நடைபெறுவது வழக்கம். 

இந்த சூழலில் களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, திருவிழா தேரோட்டம் நள்ளிரவு தொடங்கி நடைபெற்று வந்தது.

இந்நிலையில் தஞ்சாவூர் பூதலூர் சாலையில் களிமேடு பகுதியில் வந்தபோது உயர் மின்அழுத்த கம்பி உரசியதில் தேர் மீது மின்சாரம் பாய்ந்ததில் 10 பேர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

3 நாள் நடைபெறும் குருபூஜை நிகழ்ச்சியில் முதல்நாளிலே இந்த பரிதாபமான சம்பவம் நிகழ்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments