மீமிசல் பகுதியை சேர்ந்த விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் இளைஞருக்கு மருத்துவ நிதி உதவிக்காக உடனடியாக உதவிடுவீர்!

மீமிசல் பகுதியை சேர்ந்தவருக்கு மருத்துவ நிதி உதவிக்காக உடனடியாக உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

பதிவு நாள்: 27-04-2022 புதன்கிழமை

அன்புள்ள சகோதர சகோதரிகளே,

புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் பள்ளிவாசல் பகுதியில் வசித்து வரும் ராவியா அம்மாள் (லேசர் நிஷா) அவர்களின் மகன் ரகுமான் (11-ஆம் வகுப்பு படித்து வருகிறான்) கடந்த சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட வாகன விபத்தில் கை, கால், முதுகுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஸ்டீல் பிளைட் வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு நாளைக்கு மருத்துவ செலவு மூவாயிரத்தில் இருந்து நான்காயிரம் வரை செலவாகிறது. தற்போது தலையிலும் இரத்தக்கசிவு இருப்பதால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். எனவே தற்பொழுது தேவைப்படும் பொருளாதாரம் அந்த குடும்பத்தாரிடம் இல்லாததால் சிரமப்பட்டு வருகின்றனர். 
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதாரம் கிடைத்துவிட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள உதவியாக இருக்கும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ உதவி வேண்டி கோபாலப்பட்டிணத்தை சேர்ந்த இளைஞர் GPM மீடியாவிற்கு கோரிக்கை விடுத்திருந்தார். 

அதனடிப்படையில் முதற்கட்டமாக அந்த குடும்பத்தாரிடம் விசாரித்தோம். பிறகு இவர்களின் குடும்ப நிலை குறித்து உறுதி படுத்துவதற்காக சுற்றுவட்டார பகுதி மக்களிடம் விசாரித்த போது இந்த பையனுக்கு தகப்பனார் இல்லை என்றும், இரண்டு சகோதரிகள் உள்ளனர் என்று தெரிவித்தனர். மேலும் இவருடைய தாயார் வீட்டு வேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்ததாகவும், ஆகவே இந்த குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பமாக இருப்பதால் தாராளமாக உதவிட செய்தி வெளியிடுமாறு கேட்டுக்கொண்டனர். இவருடைய ஒரு சகோதரிக்கு ஜூன் மாதம் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை செய்யப்பட உள்ளது.

ஆகவே தங்களால் முடிந்த ரூபாய் 10, 50, 100, 500, 1000 என இயன்ற நிதி உதவியை அளித்து மருத்துவ சிகிச்சை பெற்று இப்பூமியில் நீண்ட நாட்கள் வாழ்வதற்கு அனைவரும் உதவிடுங்கள்.GPM மீடியா சார்பில் தகவல் உறுதி செய்யப்பட்டது. 

ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லாம் மனிதரை வாழவைத்தர் போல ஆவார்.

எனவே உதவ எண்ணுவோர், கீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் பே, போன்பே, வழியாகவோ அல்லது வங்கி கணக்கு மூலமாகவோ நல் உள்ளம் கொண்ட சகோதர, சகோதரிகள் உங்களால் முடிந்த பண உதவிகள் செய்ய வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

இப்பதிவை தங்களுக்கு தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தாங்கள் பயணிக்கும் வாட்சப் குழுக்களிலும் பகிர்ந்து உதவிடுங்கள்.

விரைந்து நிதி உதவி கிடைத்து மருத்துவ சிகிச்சை பெற்று பூரண நலத்துடன் வீடு திரும்ப அனைவரும் பிராத்திப்போம்...

உதவிடுங்கள் நண்பர்களே.

வங்கிக் கணக்கு விபரம்:

Gpay / Phonepe - 9087774541

Account Number :1647166000014740

Account Name : MOHAMED YAHIYA 

Bank Name: KARUR VYSYA BANK

Branch Name : MANAPPARAI

District : TRICHY , Tamilnadu , India

IFSC: KVBL0001647
 
இந்த வங்கி கனக்கானது GPM MEDIA  அட்மின் ஒருவருடையது.
இந்த கனக்கின் மூலம் பணம் வசூலிக்கப்பட்டு உரிய நபரிடம் வழங்க உள்ளோம்.

 இதன் வரவு கணக்கு விபரம் முறையாக GPM MEDIA தளத்தில் வெளியிடப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments