கரோனா இழப்பீடு பெற மே 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு 


சென்னை: கரோனா இழப்பீடு ரூ.50 ஆயிரம் பெற மே 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றால் மரணம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவிட்டது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பங்களை சமர்பிப்பதற்கான கால அவகாச நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி மே 18 ஆம் தேதி விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை :

20.03.2022–க்கு முன்னர் ஏற்பட்ட கரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் (18.05.2022 தேதிக்குள்) மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

20.03.2022 முதல் ஏற்படும் கோவிட்-19 இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும்.

மேற்குறிப்பிட்டுள்ள காலக் கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments