காரைக்குடி- மயிலாடுதுறை விரைவு ரெயில் புதிதாக 3 இடங்களில் நின்று செல்லும் தெற்கு ரெயில்வே அறிவிப்பு






காரைக்குடி- மயிலாடுதுறை விரைவு ரெயில் புதிதாக 3 இடங்களில் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது.




3 இடங்களில் நின்று செல்லும்

காரைக்குடி - மயிலாடுதுறை வழித்தடத்தில்  இயக்கப்படும் டெமு  எக்ஸ்பிரஸ் ரெயில் ம புதிதாக குறிப்பிட்ட  சில ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
 
தெற்கு ரெயில்வேயின் அறி விப்பிற்கு பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச் சங்கம் வரவேற்பு தெரி வித்துள்ளது.

காரைக்குடியில்
இருந்து மயிலாடுதுறை வரை அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருவாரூர் வழி யாக இயக் கப்படும் 

டெமு எக்ஸ்பிரஸ் ரெயில் தற்போது புதிதாக ஒட்டங்காடு, வாளரமாணிக்கம், கண்டனூர்- புதுவயல் ஆகிய ரெயில் நிலையங்களில், மே 6-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 1 நிமிடம் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.




வரவேற்பு

இது குறித்து, பட்டுக் கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நலச் சங்கதலைவ ரும், திருச்சி கோட்ட ரெயில் உபயோகிப்போர் ஆலோசனைக்குழு உறுப் பினருமான என்.ஜெயரா மன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:

"தெற்கு ரெயில்வே யின் இந்த அறிவிப் பால், இப்பகுதியை சேர்ந்த ரெயில் பயணிகள் பெருமளவில் பயன் அடைவார்கள். பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல ஒரு நிமிடம் ரெயில் நின்று செல்லும் என்பதனை சங்கத்தின் சார்பில்  வரவேற்கிறோம்"

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments