கோபாலப்பட்டிணம் நெடுங்குளம் பிரதான சாலையில் ஆறு மாதத்திற்கு மேலாக எரியாத தெரு விளக்கு GPM மீடியா செய்தி எதிரொலியாக தெரு விளக்கு எரிய நடவடிக்கை எடுத்த வட்டார வளர்ச்சி அலுவலர்!!
கோபாலப்பட்டிணம் நெடுங்குளம் பிரதான சாலையில் ஆறு மாத காலத்திற்கு மேலாக எரியாத தெரு விளக்கை GPM மீடியா செய்தி எதிரொலியாக ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலரின் நடவடிக்கையால் ஊராட்சி நிர்வாகம் சரி செய்தது.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம், நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து கோபாலப்பட்டிணத்திற்கு செல்லும் பிரதான சாலை அமைந்துள்ளது. கோபாலப்பட்டிணத்தில் இருந்து மீமிசல் செல்வதற்கும், வெளியூரில் இருந்து கோபாலப்பட்டிணம் கடற்கரை பகுதிக்கு செல்ல இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன. தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தெரு விளக்குகள் எரியாமல் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மேலும் இரவு நேரங்களில் பெண்களும், குழந்தைகளும் வெளியில் வருவதற்கு கூட அச்சமடைந்தனர். 


ஆறு மாத காலத்திற்கு மேலாக எரியாத தெரு விளக்கை பற்றி பலமுறை  GPM மீடியாவில் செய்திகள் வெளியிடப்பட்டும் மற்றும் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் ஊராட்சி நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. இதனையடுத்து ஆவுடையார்கோவில் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் GPM மீடியா சார்பாக தொலைபேசி வாயிலாக புகார் கூறப்பட்டதையடுத்து   ஆறு மாத காலத்திற்கு மேலாக எரியாத தெருவிளக்கை சரி செய்து 29.04.2022 அந்த பகுதியில் உள்ள அனைத்து மின் விளக்குகளும் எரியவிடப்பட்டது.

 டிசம்பர் 12 2021 அன்று வெளியிடப்பட்ட் செய்தி
          மார்ச்  12 2022 அன்று வெளியிடப்பட்ட் செய்தி

         ஏப்ரல்   12 2022 அன்று வெளியிடப்பட்ட் செய்தி

தெருவிளக்கு எரிய உடனடியாக நடவடிக்கை எடுத்த ஆவுடையார்கோவில் ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு GPM மீடியா மற்றும் அப்பகுதி மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துகொள்கின்றோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments