ஆவுடையார்கோவில் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் அமுதப்பெருவிழா
ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் கண்ணன் தலைமை தாங்கினார். அறந்தாங்கி கல்வி மாவட்ட அலுவலர் ராஜாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, அமுதப் பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை மற்றும் ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார். ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் அறந்தாங்கி கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் இளையராஜா, முதுகலைப் பட்டதாரி தமிழாசிரியர் குமார் மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி தமிழ்த்துறை தலைவர் திருவாசகம் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் அனிதா நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிதியாளர், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் செய்திருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments