கோபாலப்பட்டிணத்தில் 2-வது செல்போன் கோபுரம் அமைக்கும் இறுதி கட்ட பணிகள் மும்முரம்






புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் புதிய செல்போன் கோபுரம் அமைக்க வேண்டும் என பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. 

கோபாலப்பட்டிணத்திற்கு என்று தனியாக செயல்பட்டு வந்த செல்போன் கோபுரம் செயலிழந்ததாலும் தற்பொழுது செல்போன் கவரேஜ் சரியாக கிடைக்காததால் குறிப்பிட்ட வேலைகளை செய்வதற்கும், மாணவர்கள் படிப்பதற்கும், அயல் நாட்டில் உள்ள உறவினர்களுடன் கலந்துரையாடுவதற்கும் மக்கள் பெரும் சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரு அவசர செய்தியை கூட பகிர்ந்து கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது. 

தற்பொழுது உள்ள சூழ்நிலையில் செல்போன் ஒலித்தால் வீட்டை விட்டு வெளியிலோ அல்லது மாடிக்கோ சென்று தான் பேசும் நிலைமை  உள்ளது. இதனால் முதியவர்களும், பெண்களும் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.  

செல்போன் சிக்னல் கிடைக்காததால் செல்போனை ஒரு சிலர் வீட்டின் வெளிப்பகுதியிலும், ஜன்னல் ஓரங்களிலும் மற்றும் வீட்டு மாடியிலும்  வைத்துக் கொண்டு காத்திருப்பவர்கள் ஏராளம்! படிப்புகளும் பறிபோகின்றது. 

ஜியோ, ஏர்டெல் நெட்வொர்க் சேவை

இந்நிலையில் கோபாலப்பட்டிணம் ஜமாஅத்தார்களின் முயற்சியால் பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள ஜாமத்திற்கு சொந்தமான இடத்தில் (உமர் முக்தார் நற்பணி மன்றம் எதிரில்) புதிய செல்போன் கோபுரம் அமைக்க தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த 27.12.2021 தனியார் நிறுவனம் தனது புதிய செல்போன் கோபுரம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பாக பணிகள்  முடிவடைந்த நிலையில் ஜியோ செல்போன் கோபுரம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

அதே போல் கடந்த மார்ச் 16-ம் தேதி ஏர்டெல் நெட்வொர்க் கோபுரம் அமைக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து ஏர்டெல் நெட்வொர்க் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.














எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments