எலுமிச்சம் பழம் விலை உயர்வு; உற்பத்தி சரிவால் விவசாயிகள் கவலை




வடகாடு மற்றும் மாங்காடு சுற்று வட்டார பகுதிகளில் எலுமிச்சை பழ மரக்கன்றுகளை விவசாயிகள் தனித்தோப்பாகவும், தென்னை, மா, பலா, தேக்கு உள்ளிட்ட மரங்களுக்கு இடையே ஊடு பயிராகவும் நட்டு பராமரித்து வருகின்றனர். தற்போது தமிழகமெங்கும் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வெயிலில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள மக்கள் இளநீர், நுங்கு, மோர், எலுமிச்சை, தர்பூசணி ஆகிய குளிர்ச்சியான பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இப்பகுதிகளில் அதிக அளவில் உற்பத்தி ஆகக்கூடிய எலுமிச்சை பழங்கள் கடந்த மாதங்களில் கேட்பாரின்றி கடைகளில் டன் கணக்கில் குவிந்து கிடந்தது. ஒரு கிலோ ரூ.10 மற்றும் ரூ.15 என்று கூட விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.100-க்கு விற்பனை ஆகி வருகிறது. ஆனால் தாமதமான விற்பனை விலை உயர்வால் விவசாயிகள் கவலைப்பட்டு வருகின்றனர். தற்போது இப்பகுதிகளில் எலுமிச்சம் பழம் ஒரளவுக்கு நல்ல விலைக்கு விற்பனை ஆகி வரும் நிலையில் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளதால் இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் கவலைப்பட்டு வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments