கோட்டைப்பட்டினத்தில் பெண்ணிடம் கத்தியை காட்டி நகை பறிக்க முயன்றவர் கைது
கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் தாஜூதீன் மனைவி பைலா பானு (வயது 51). இவர் நேற்று வீட்டில் தனியாக இருக்கும்போது 2 மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி அவரிடமிருந்து நகையை பறிக்க முயற்சித்துள்ளனர். பைலா பானு கூச்சலிட்டு உள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் வந்தனர். இதையறிந்த மர்மநபர்கள் 2 பேரும், அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் தப்பி ஓடிய 2 பேரில் ஒருவரை மட்டும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் இதுகுறித்து கோட்டைப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், அங்கு வந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில் அவர் மதுரையை சேர்ந்த சித்திக் அலி (43) என்பது தெரியவந்தது. மேலும் அவர் மீது ஏற்கனவே 8 திருட்டு வழக்குகள் மதுரை போலீஸ் நிலையத்தில் உள்ளது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சித்திக்அலியை கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments