தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்... அணியாவிட்டால் ரூ. 500 அபராதம் - டாக்டர் ராதாகிருஷ்ணன்






சென்னை: தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது. அபராதம் வசூலிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது. டெல்லி, கேரளா, ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா பரவி வருகிறது.

இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பதால் பதற்றம் அடைய தேவை இல்லை என மத்திய அரசே கூறியுள்ளது என்றார். கல்வி நிறுவனங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்கனவே வழங்கி உள்ளோம். சென்னை ஐஐடியில் கொரோனா உறுதியான மாணவர்கள் உடல்நிலை சீராகவே உள்ளதாகவும் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் எப்போதுமே மாஸ்க் கட்டாயம்தான்.. வரும் காலத்தில் கொரோனா உயரலாம்! சொல்கிறார் ராதாகிருஷ்ணன்தமிழகத்தில் எப்போதுமே மாஸ்க் கட்டாயம்தான்.. வரும் காலத்தில் கொரோனா உயரலாம்! சொல்கிறார் ராதாகிருஷ்ணன்

ரூ.500 அபராதம் 

பொது இடங்களிலும் சினிமா தியேட்டர்கள், கோவில்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் மாஸ்க் அணியாமல் இருப்பதாகவும் தெரிவித்த அவர், தமிழகத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா 

இந்தியாவில் கடந்த 3 மாதமாக கொரோனா பாதிப்பு குறைந்ததன் காரணமாக மக்கள் நிம்மதி அடைந்தனர். தங்களது இயல்பான வாழ்க்கை தொடங்கினர். இந்தநிலையில் சீனா, தென் கொரியா, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. தற்போது மீண்டும் இந்தியாவிற்கும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 

டெல்லியில் அதிகரித்த கொரோனா பரவல் மெல்ல மெல்ல பல்வேறு மாநிலங்களிலும் பரவ தொடங்கியுள்ளது. நேற்று மட்டும் தமிழகத்தில் 39 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 21 பேருக்கும் 10 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பரவல் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள மருத்துவமனையில் 256 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஐஐடியில் கொரோனா 

சென்னை ஐஐடியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு பரவி வருகிறது. நேற்று கொரோனா பரிசோதனை முடிவில் 11 பேருக்கு பாதிப்பு இருந்த நிலையில் இன்று மேலும் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 700 பேருக்கு சோதனை செய்ததில் 30 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 29 மாணவர்களுக்கும், பணியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐஐடியில் உள்ள உணவு விடுதிகளில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ குழுவினரும் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வரும் நாட்களில் மேலும் பலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments