வெளியாத்தூர் கிராமத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது. பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.




புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே வெளியாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சண்முகவள்ளி. இவர்களுக்கு இனியன் என்ற மகனும், ஹரிணி என்ற மகளும் உள்ளனர். கணேசனுக்கு அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடு சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட தாகும். இதில் குடியிருந்து வருகின்றனர்.

வீடு இடிந்து விழுந்தது

இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வீட்டின் மேலே உள்ள தளமும், சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது. இதில் கணேசன் மனைவி சண்முகவள்ளி வீட்டில் சமையல் செய்துகொண்டு இருந்ததால் சுவற்றின் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கிய சண்முகவள்ளியை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அதிர்ஷ்டவசமாக கணேசன் மகள், மகன் இருவரும் வெளியில் விளையாடிக் கொண்டிருந்ததால் உயிர் தப்பினர். கணேசனும் வெளியே சென்றிருந்தார்.

கணேசன்-சண்முகவள்ளி குடும்பத்திற்கு வீடு இல்லாததால் அரசு வீடு கட்டிக் கொடுத்தால் நல்லது என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இடிந்த வீட்டை விளானூர் ஊராட்சி மன்ற தலைவர் சேதுபதி பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments