சைபர் குற்றங்கள் குறித்து IAS அகாடமி மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர்.
திருச்சி மண்டல காவல் துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் உத்திரவின்படியும், திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் திரு.A.சரவண சுந்தர் இ.கா.ப., அவர்களின் அறிவுறித்தலின்படியும், புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் இ.கா.ப., அவர்கள் வழிகாட்டுதல்படியும், சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆறுமுகம் அவர்களின் மேற்பார்வையில்,  07.04.2022ஆம் தேதி இன்று புதுக்கோட்டை மாவட்டம் IAS அகாடமியில் மாணவ மாணவிகளிடம் சைபர் கிரைம் தலைமை காவலர் திருமதி.லதா மற்றும் சைபர் கிரைம் குழுவினர் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு செய்தனர். 

இந்த விழிப்புணர்வில் இணையம்  வழியாக நடக்கும் குற்றங்களான ஏடிஎம் கார்டை பயன்படுத்துவது பற்றியும், ஏடிஎம் கார்டு மற்றும் ஒடிபி  எண் பகிரகூடாது என்பது பற்றியும், வங்கி விவரங்களை யாருக்கும் கூறக்கூடாது என்றும், வேலை வாங்கி தருவது, அயல்நாடு வேலைக்கு செல்வது, செல்போன் டவர் வைப்பது, பரிசு கிடைத்திருப்பது, சமூக வலைதளங்கள், தங்களை பற்றிய தகவல்களை பாதுகாப்பாக வைப்பது குறித்து, பாஸ்வேர்டு  அடிக்கடி மாற்ற வேண்டுவது குறித்தும், ஆன்லைன் விளையாட்டு குறித்தும், தேவையில்லாத அப்ளிகேசன் பதிவிறக்கம் செய்வது குறித்தும், ஆன்லைன் வர்த்தகம் குறித்தும், வங்கிகளில் பணம் செலுத்தும் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்தும், மேலும்  மூலம் பண இழப்பு ஏதேனும் ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 க்கு உடனடியாக தகவல் அளிப்பது குறித்தும், www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் எவ்வாறு புகார் செய்வது என்பது குறித்தும் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது.

என்றும் மக்கள் நலனிற்கும், பாதுகாப்பிற்கும்
 புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments