புதுக்கோட்டை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளை அணுகி நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் மண்டல இணைப்பதிவாளர் தகவல்
புதுக்கோட்டை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் எம். உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தது. இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் வரை நகைக்கடன் பெற்றவர்களில் 36,901 பேர் தகுதி வாய்ந்த பயனாளிகள் என கண்டறியப்பட்டு அவர்களுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ் தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்படுகிறது. தள்ளுபடி பெற தகுதிவாய்ந்த கடன்தாரர்களின் கடன் தள்ளுபடி விவரம் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரின் www.pudukkottai.nic.in என்ற இணையதள முகவரியிலும், புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் www.pccbank.in என்ற இணையதள முகவரியிலும் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள பொதுமக்கள் தாங்கள் நகைக்கடன் பெற்றுள்ள புதுக்கோட்டை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளை அணுகி கடன் தள்ளுபடி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். மேலும் கடன் தள்ளுபடியில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கும் பொதுமக்கள் புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சரகத் துணைப்பதிவாளர் அலுவலகங்களில் செயல்படும் சரக அளவிலான சிறப்பு குறைதீர்வுக் குழுக்களிடம் உரிய ஆவணங்களுடன் மேல்முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments