அதிகரித்து வரும் தொலைபேசி மோசடி அழைப்புகளில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள சென்னை பெருநகர காவல்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.




தொலைபேசி மூலம் ஓ.டி.பி. பெறுவது, ஏ.டி.எம். கார்டு விவரங்கள் கேட்பது என்ற நிலையில் இருந்து மோசடி நபர்கள் தற்போது முன்னேறி பல்வேறு உத்திகளை கையாள்வதாக காவல்துறை தெரிவித்துள்ளனர்.
அதாவது, கேஸ் மானியம் உங்கள் வங்கி கணக்கிற்கு வரும், போட்டித்தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது மொபைல் எண்ணை மாற்றி கொடுத்து விட்டேன் போன்ற பல்வேறு நூதன முறைகளில் மோசடியாளர்கள் பொதுமக்களை அணுகுகின்றனர். அதே போன்று பான் கார்டு மற்றும் கே.ஒய்.சி இணைக்கவில்லை என்றால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று வரும் எஸ்.எம்.எஸ்.-க்களை பொதுமக்கள் நம்பக்கூடாது என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் அமேசானில் பகுதி நேர வேலை, கிரிப்டோ வணிகம் போன்று வாட்ஸ் ஆப் மற்றும் டெலிகிராமில் வரும் செய்திகளை நம்பி பணம் தரக்கூடாது என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஓ.எல்.எக்ஸ் போன்ற செயலிகளில் பொருட்களை விற்கும் போது, க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்யச் சொன்னால் அதனைத் தவிர்க்க வேண்டும். மேலும் கடன் செயலிகள் மூலம் கடன் வாங்க வேண்டாம் என்று காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். பொதுமக்கள் யாரேனும் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டு இருந்தால், புகார் அளிக்க உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments