கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை நடத்தும் பெண்களுக்கான இஸ்லாமிய கேள்வி பதில் போட்டி! கேள்விகள் வெளியீடு!!




கோபாலப்பட்டிணம் என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை நடத்தும்  மூன்றாவது இஸ்லாமிய கேள்வி பதில் போட்டிக்கான கேள்விகள் அதிகாரப்பூர்வமாக இன்று வெளியிடப்படுகிறது.

(பதில்களை எழுதும் போட்டியாளர்கள் கண்டிப்பாக விதிமுறைகளை படிக்கவும்)



கேள்விகள் PDF வடிவில் உள்ளது டவுன்லோடு செய்ய Download Now   எழுத்தை கிளிக் செய்யவும்

download now



முதல் பரிசாக  வாசிங் மெசின் மற்றும் 15 கிராம் வெள்ளியும்

இரண்டாம் பரிசாக ரூபாய் 5000 மதிப்புள்ள பொருள் மற்றும் 10 கிராம்
வெள்ளியும்

மூன்றாம் பரிசாக ரூபாய் 3000 மதிப்புள்ள பொருள்கள் மற்றும் 8 கிராம் வெள்ளியும்

மேலும் ஆறுதல் பரிசு பெறும் 50
போட்டியாளர்களுக்கும் முதல் மூன்று பரிசு பெறுபவர்களுக்கும் சிறப்பு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்

*குர்ஆனோடு நாம் தொடர்பை ஏற்படுத்திகொள்ளவேண்டும், குர்ஆனில்  அல்லாஹ் சொல்லிருப்பதை நாம் சுயமாக படித்து,தெரிந்து, புரிந்து  அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே நாம் இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்துகின்றோம்.

*இந்த ரமலானில் அதிகம் அதிகமாக நல் அமல்கள் செய்வதிலும் மார்க்க அறிவை பெருக்கி கொள்வதிலும் நமது நேரத்தை செலவு செய்ய அல்லாஹ் அனைவருக்கும் அருள்புரிவானாக.

விதிமுறைகள்

*கேள்விகள் அனைத்தும் குர்ஆனிலிருந்துமட்டும் கேட்கப்பட்டிருக்கும் எனவே பதில் எழுதும்பொழுது அதற்குரிய வசனத்தை (தமிழில் மட்டும்) முழுவதுமாக எழுத வேண்டும் மற்றும் ஸூரா எண்,வசன எண் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.

*கேள்வியின் வரிசை எண் மாறாமல் பதிலளிக்க வேண்டும்

*(Paper Presentation)-(A4-தாள் அல்லது டிம்மி)
பதில்கள் மிகத்தெளிவாக அழகான நடையில் எழுதவேண்டும்.

* கோபாலப்பட்டினத்தை சேர்ந்த பெண்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.

*விடைத்தாள்களில் தங்களது பெயர்/தகப்பனார் அல்லது கணவர் பெயர் மற்றும் தகப்பனார் தொடர்பு எண் அல்லது கணவர் தொடர்பு எண்ணை குறிப்பிடவும்

*விடைத்தாளை 20-04-2022 புதன் அன்று பெண்களுக்கு இரவுத்தொழுகை நடைபெறும் பள்ளிகளில்/மதரசாவில் உள்ள பெட்டியில் போட வேண்டும்.

*ஒரே குடும்பத்தில் (எ.கா தாய்,மகள்) ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்தாள்கள் சமர்பிக்கப்பட்டால் அனைத்தும் நிராகரிக்கப்படும்.

* போட்டியாளர்களின் மதிப்பெண்கள் சமமாக இருக்கும் வேளையில் குலுக்கல் முறையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படும். 

*பரிசளிப்பு விழா பெருநாள் தொழுகை முடிந்தவுடன் ஈத்கா மைதானத்தில் ஊர் ஐமாத்தார்கள்  மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வழங்கப்படும்.

மேலதிக தகவல்களுக்கு

என்றும் உதவும் கரங்கள், 
கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை,
கோபாலப்பட்டிணம்.
புதுக்கோட்டை மாவட்டம்.
+91 97894 76612
+91 97879 56584

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments