கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் பள்ளிவாசலில் மின்னல் தாக்கி மினாரா சேதம்!

கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் பள்ளிவாசலில் மின்னல் தாக்கி மினாரா சேதம் அடைந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் நேற்று இரவு பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது.

இந்நிலையில் கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் பள்ளிவாசலில் உள்ள மினாரா மீது மின்னல் தாக்கியது. இதனையடுத்து மினாரா மீது இருந்த பிறை போன்ற சில்வரும் மற்றும் சிமெண்ட் காரைகள் சேதமைடைந்தது. மேலும் பள்ளிவாசலில் மின் பழுது ஏற்பட்டுள்ளது.

மின்னல் குறித்து அங்கு பணி செய்து வரும் மோதினார் கூறுகையில், அதிக வெளிச்சத்துடன் பள்ளிவாசல் வளாகத்தில் ஒன்று விழுந்ததை கண்டேன். பிறகு வெளியில் வந்து பார்க்கையில் மினாராவில் மேல் இருந்த பிறை போன்ற சில்வர் மற்றும் சிமெண்ட் காரைகள் கீழே கொட்டி கிடந்தது. மேலும் என் வாழ்நாளில் இது போன்ற ஒரு நிகழ்வை பார்த்ததில்லை என கூறினார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments