மணமேல்குடி மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை கடும் உயர்வு
மணமேல்குடியில் செயல்படும் பெரிய மீன் மார்க்கெட்டில் தினசரி நாட்டுப்படகில் பிடிக்கப்படும் மீன்கள், இறால்கள் விற்பனைக்கு வருகிறது. இந்த மீன்களை வாங்குவதற்கு வியாபாரிகளும், மீன் பிரியர்களும் மார்க்கெட்டிற்கு வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக மணமேல்குடி மீன் மார்க்கெட்டில் மீன்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பாறை, முரல், செங்கனி ஆகிய வகை மீன்கள் தற்போது கிலோ ரூ.450 முதல் ரூ. 500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், தற்போது தொடர்ந்து டீசல் விலை உயர்ந்து வருவதால் மீன்கள் விலை உயர்ந்துள்ளதாக கூறினர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments