கந்தர்வகோட்டை அருகே மின்னல் தாக்கி 3 பெண்கள் காயம் மருத்துவமனையில் சிகிச்சை
மின்னல் தாக்கி 3 பெண்கள் காயமடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று  ஆங்காங்கே மழை பெய்தது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் மதியத்திற்கு மேல் லேசாக மழை தூறியது. அதன்பின் மழை நின்றது. மாவட்டத்தில் ஆங்காங்கே இதேபோல மழை பெய்தது. இந்த நிலையில் கந்தர்வகோட்டை அருகே சிவந்தான்பட்டி கிராமத்தில் நிலத்தில் கடலை பறிப்பு வேலையில் மேனகா (வயது 32), அன்னக்கிளி (38), பொன்னு அரும்பு ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது வானில் கருமேகங்கள் திரண்டு பலத்த சத்தத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது அவர்கள் 3 பேரும் மழைக்கு ஒதுங்கி அருகில் உள்ள மரத்தடியில் தஞ்சமடைந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் மேனகா, அன்னக்கிளி, பொன்னு அரும்பு ஆகிய 3 பேரும் காயமடைந்தனர். மேலும் அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments