புதுக்கோட்டை வழியாக செல்லும் பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (ஏப்ரல் 13 - புதன்கிழமை) அன்று பகுதி நேர ரத்து




புதுக்கோட்டை வழியாக செல்லும் பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (ஏப்ரல் 13) அன்று பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
காரைக்குடி டு சென்னை எழும்பூர் மார்க்கம் சென்னை கடற்கரை-விழுப்புரம் இடையே நடைபெறும் பொறியியல் பணிகள் காரணமாக, வரும் ஏப்ரல் 13 அன்று புதுக்கோட்டையிலிருந்து காலை 06:05 மணிக்கு சென்னை நோக்கி புறப்படும் வண்டி எண்-12606/காரைக்குடி-சென்னை எழும்பூர் பல்லவன் ரயில் 'செங்கல்பட்டு' வரை மட்டுமே செல்லும். மேலும் இந்த ரயில் சென்னை எழும்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை எழும்பூர் டு காரைக்குடி மார்க்கம் அதே நாளில் ஏப்ரல் 13 அன்று சென்னையிலிருந்து மாலை 03:45 மணிக்கு புதுக்கோட்டை நோக்கி புறப்படும் 12605/சென்னை எழும்பூர்-காரைக்குடி 'பல்லவன்' ரயில் வழக்கம்போல் சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. காரைக்குடி பல்லவன் அதிவேக அதிவிரைவு ரயிலும் , மதுரை வைகை அதிவேக அதிவிரைவு ரயிலும் ரேக் சேரிங் செய்கிறது ... வைகை, பல்லவன் விரைவு ரயில்கள் ஏப்ரல் 13 ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுதொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்ட செய்தி: சென்னை விழுப்புரம் ரயில்வே பிரிவில் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதையடுத்து, ஏப்ரல் 13 ஆம் தேதி காரைக்குடியிலிருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் காரைக்குடி - சென்னை எழும்பூா் பல்லவன் விரைவு ரயில் (12606) செங்கல்பட்டு - சென்னை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு செங்கல்பட்டு வரை மட்டும் இயக்கப்படும். அதேபோல ஏப்ரல் 13 ஆம் தேதி சென்னையிலிருந்து பிற்பகல் 1.50 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூா் - மதுரை வைகை விரைவு ரயில் (12635) சென்னை - செங்கல்பட்டு இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, செங்கல்பட்டிலிருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும். அதேநேரம் ஏப்ரல் 13 ஆம் தேதி மதுரை - சென்னை எழும்பூா் வைகை விரைவு ரயில் (12636) மற்றும் சென்னை எழும்பூா் - காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605) ஆகியவை வழக்கம்போல் இயங்கும் எனக் குறிப்படப்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments